SG60 – Dynamic Tamil Youths Book Launch 2025
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30ஆம் நாள் (30/11/2025), சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் "எழுச்சிமிகு தமிழ் இளையர்" எனும் பாராட்டு நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு துறைகளில் பங்களித்த 60 எழுச்சிமிகு இளையர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த விழா அமைந்தது. நிகழ்வையொட்டி தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகளில் எழுச்சிமிகு தமிழ் இளையர் என்ற நூல் வெளியிடப்பட்டது.
உட்லண்ட்ஸ் தேசிய நூலகத்தில் மாலை சுமார் நான்கு மணிக்கு வரவேற்பு நடனத்துடன் விழா துவங்கியது. வெஸ்ட் கோஸ்ட் - ஜுராங் வெஸ்ட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ராக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திருமதி ருக்மணிதேவி சயந்தன், வெவ்வேறு துறைகளில் சாதித்த இளையர்களைக் கண்டறிந்து அவர்களின் பங்களிப்பினை புத்தகமாகத் தொகுத்ததில் இருந்த சவால்களை மேடையில் பகிர்ந்து கொண்டார். தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக பணியை முடித்ததில் மனநிறைவு அடைந்ததாகக் கூறினார். தன்னோடு பயணித்த குழுவினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து நூலை வெளியிட பக்கபலமாக இருந்த மன்றத்தின் மதியுரைஞர் பேராசிரியர் அ.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். முதலில் சிறப்பு விருந்தினரையும், தம் பிள்ளைகளை சான்றோர்களாக வளர்த்துள்ள பெற்றோர்களையும், எழுச்சிமிகு இளையர்களையும் மற்ற சமுதாயத் தலைவர்களையும் வரவேற்று தன் சிறப்புரையைத் தொடங்கினார். அவர் தமது உரையில், உலக மாற்றங்கள் நம்மை வந்தடைவது போல நம் முன்னெடுக்கும் முயற்சிகள் யாவும் உலகத்தைச் சென்றடைகின்றன என்றார். தமிழ்மொழி சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முக்கிய மொழி. நம் பண்பாடு நிலைத்திருக்க வரலாற்றுப் பதிவுகள் மிகவும் முக்கியம். பண்பாடு என்பது பொதுவான வெளிப்பாடு. வரலாறு இரு வகைப்பட்டது. ஒன்று மேலோட்டமானது. இதில் ஒரு சிலர் முக்கிய மனிதர்கள் பாராட்டப்படுவர். மற்றொன்று தனிமனித வரலாறு. 68-ஆம் ஆண்டில் செயல்படும் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் 1957-ல் 5, Cuff ரோட்டில் டாக்டர் ஜி ராமலின் இல்லத்தில் தொடங்கப்பட்டது. இதன் அறுபது ஆண்டுக்கால வரலாறு நூல் வடிவில் உள்ளது. விரைவில் 70-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

இப்போதைய தலைவர் குமாரி லாவண்யா அதற்கான குழுவை அமைத்து வழி நடத்தி வருகிறார். பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இளையர் மன்றம் நம் பண்பாட்டையும் வரலாற்றையும் நிலைநாட்டி வருகிறது. நமது இளையர் நமது எதிர்காலம்” என்னும் பார்வையில் இன்று எழுச்சிமிகு இளையர் நூல் வெளியீடு காண்கிறது. நமது எதிர்காலம் நம்மிடையே உள்ளது. சிங்கப்பூர்த் தமிழர் என்னும் இரண்டு தொகுப்பு நூல்கள் பெரியவர்களின் தனிமனித பங்களிப்பை காட்டுகிறது. மேலும் 3 தொகுதிகள் வெளியீடு காண உள்ளன. எழுச்சிமிகு தமிழ் இளையர் எனும் நூல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியீடு காணும் என்று இளையர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அவரின் உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி நெறியாளர்கள் திரு மாறன் அவர்களும், குமாரி ரேகா அவர்களும் சிறப்பு விருந்தினர் குறித்த ஒரு அறிமுகத்தை வழங்கினர்.

2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் - ஜுராங் வெஸ்ட் குழுத் தொகுதியின் Jurong Spring - Gek Poh பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், டாக்டர் ஹமீது ராசாக் அவர்கள். 15 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், கூட்டுப் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். Total orthopedic private limited இயக்குநராகவும், சிங்கப்பூர் பொது மருத்துவமனை, மற்றும் செங்காங் பொது மருத்துவமனை ஆகியவற்றில் வருகை ஆலோசகராகவும், Duke NUS மருத்துவப் பள்ளியில் துணை இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். Singhealth Outstanding Resident Award, COVID 19 Health Award, Singapore Youth Award மற்றும் JCI Singapore Ten Outstanding Young People Honour போன்ற பற்பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் தீவிர சமூகத் தொண்டராகவும், 2017 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி உறுப்பினராகவும் சேவை புரிந்து வரும் இவர், இளையர் மேம்பாடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை ஆதரித்தும் வருகிறார். இந்திய முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கான IMPROF என்ற அமைப்பை நிறுவவும் உதவினார். அந்த அமைப்பில் 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராகவும், இப்போது ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீன மொழிகளில் சரளமாகப் பேசும் டாக்டர் ஹமீது, சிங்கப்பூரின் பன்முகக் கலாச்சார உணர்வையும் சேவைக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

30 November 2025
Article By : Ms Swarnalakshmi Jayaraman