அச்சம் இன்றி உச்சம் தொட்ட உச்சம் 2025, இளம் தமிழரின் மாபெரும் கலை நிகழ்ச்சி



சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் ஏற்பாடு செய்த “உச்சம் 2025” மாபெரும் கலை நிகழ்ச்சி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில், சனிக்கிழமை செப்டம்பர் 13ஆம் தேதி கோலாகலமாக அரங்கேறியது. போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 101 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 47 பேர் இறுதி போட்டியாளர்களாக நடனம், பாடல், குறும்படம் மற்றும் பேச்சுக் கவிதை போன்ற பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலை நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் தலைவர் செல்வி லாவண்யா மற்றும் உச்சம் நிகழ்ச்சியின் தலைவர் திரு. ராயன் அவர்களின் உரைகளுடன் தொடங்கியது.

styc
styc

styc
styc
இந்த நிகழ்ச்சியின் பிரதான சிறப்பம்சமாக, தொலைக்காட்சி கலைஞர்கள் நடுவர்களாக திருமதி பாரதி ராணி அருணாசலம், திரு. எபி ஷங்கரா, திரு. சரவணன் அய்யாவு, திரு. அரவிந்த்குமார் (தலைமை நிர்வாக அதிகாரி – Vinsanity) ஆகியோர் தங்களின் அனுபவங்களைக் கொண்டு போட்டியாளர்களை மதிப்பீடு செய்தனர்.

styc
styc
5 நடனக் குழுக்கள் (அழகிய தமிழ் மகள், ஆதிரைகள், PAN Sisters, ஆடினேன் இருப்போம், Nritya Varnam) கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தின. பாடல் பிரிவில் 6 பாடகர்கள் மற்றும் பாடகக் குழுக்கள் (Bala Vicknesh, Ismail Fazith, Mic Mohans, Ruzbihan Sameer, இசை முகில், Sutharsshan Sivakumar) பங்கேற்றனர். குறும்படப் போட்டியில் 3 குழுக்கள் (Oru Thalai Raagam, Megam Vilagum Neram, ரத்துக்கு பத்து) தங்கள் குறும்படங்களை வழங்கினர். கூடுதலாக, 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பேச்சுக் கவிதை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
மொத்தத்தில் 14 குழுக்கள் / தனிப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு, தமிழ் இளையரின் இசை, நடனம், சினிமா மற்றும் இலக்கியத் திறமைகள் மேடை ஏற்றப்பட்டன.

styc
styc
நிகழ்ச்சியின் நிறைவில், உச்சம் 2025 நிகழ்ச்சியின் உதவிச் செயலாளர் குமாரி லேகா நிறைவுரையாற்றினார். போட்டியை வெற்றிகரமாக முன்னெடுத்த நீதிபதிகள், ஆதாராளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.தொடர்ந்து, மிகுந்த ஆவலுடன் காத்திருந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், பாடல், நடனம், குறும்படம் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

“உச்சம் 2025” நிகழ்ச்சி, இளைஞர்களின் திறமைகளையும் தமிழர் கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலித்தது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்

styc
styc

13 September 2025

Article By : Mr. Thanushan